Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை தேனாம்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று காலை 11:00 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும், பொது விநியோகத் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட உள்ளன.
இன்று நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார்.
இதில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b