தமிழக சட்டப்பேரவையில் இன்று சமூக நீதித்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம்
சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று முக்கிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இன்றைய நாள் நிகழ்ச்சி நிரலின்படி, சமூக நீதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர
தமிழக சட்டப்பேரவையில் இன்று சமூக நீதித்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம்


சென்னை, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று முக்கிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

இன்றைய நாள் நிகழ்ச்சி நிரலின்படி, சமூக நீதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இந்த கூட்டத் தொடரில் இன்று முதல் கேள்வி நேரம் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. கடந்த சில நாட்களாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த கேள்வி நேரம், இன்று முதல் வழக்கம் போல் நடைபெறுகிறது. இதில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளிப்பார்கள்.

இதனைத் தொடர்ந்து, சமூக நீதித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை முன்வைக்க உள்ளனர். பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் சிறுபான்மையின மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, நலத்திட்டங்கள் குறித்து உறுப்பினர்கள் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பிறகு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலுரை வழங்க உள்ளனர்.

அப்போது, துறை சார்பில் புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய திட்டங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b