நேபாள வெள்ளத்தில் சிக்கிய புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் பாதுகாப்பாக உள்ளனர் - மாவட்ட நிர்வாகம் தகவல்
புதுச்சேரி, 27 ஆகஸ்ட் (ஹி.ச.) நேபாளத்தில் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் தகவல் தொடர்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு சிக்கியுள்ள யாத்ரீகர்களை செல்போனில் தொடர்பு கொள்ள முடியாத ச
நேபாள வெள்ளத்தில் சிக்கிய புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் பாதுகாப்பு - மாவட்ட நிர்வாகம் தகவல்


புதுச்சேரி, 27 ஆகஸ்ட் (ஹி.ச.)

நேபாளத்தில் தொடர் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் தகவல் தொடர்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு சிக்கியுள்ள யாத்ரீகர்களை செல்போனில் தொடர்பு கொள்ள முடியாத சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து கைலாஷ் யாத்திரைக்காக நேபாளம் சென்று அங்கு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட பயணிகளில், புதுச்சேரியை சேர்ந்த மூன்று பேர் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியில் இருந்து கும்பகோணத்தைச் சேர்ந்த தனியார் டிராவல் ஏஜென்சி மூலமாக நேபாளத்திற்கு யாத்திரை சென்றவர்களில் சுந்தரி, வைஷ்ணவி மற்றும் கீதா ஆகிய மூன்று பேரும் பத்திரமாக உள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் புதுச்சேரியைச் சேர்ந்த அந்த மூன்று பேரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் வட்டாரத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை பத்திரமாக மீட்டு தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Hindusthan Samachar / vidya.b