ஒகேனக்கல் காவிரியில் 6,500 கனஅடி நீர்வரத்து நீடிப்பு
தருமபுரி, 28 ஆகஸ்ட் (ஹி.ச.) ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 6,500 கன அடியாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி பரிசல் இயக்குவதற்கு விதிக்கப்பட்ட தடை இன்றும் தொடர்கிறது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப
Inflow of 6,500 cubic feet per second continues in the Cauvery at Hogenakkal.


தருமபுரி, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 6,500 கன அடியாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி பரிசல் இயக்குவதற்கு விதிக்கப்பட்ட தடை இன்றும் தொடர்கிறது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது.

இந்த நீர்வரத்து அனைத்தும் ஒகேனக்கல் வழியாக வந்து கொண்டிருப்பதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு சற்று அதிகரித்தே காணப்படுகிறது.

கடந்த சில நாட்களாக 6,000 கன அடிக்கு மேல் நீர்வரத்து இருந்து வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி, வினாடிக்கு 6,500 கன அடியாக நீர்வரத்து பதிவாகியுள்ளதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருப்பதால் பிரதான அருவிகளான ஐந்தருவி, சினிஃபால்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கத்திற்கு தொடர்ந்து தடை விதித்துள்ளது.

கடந்த 13 நாட்களாக பரிசல்கள் இயக்கப்படாததால், ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியை கரையில் இருந்து மட்டுமே கண்டு ரசித்து செல்கின்றனர்.

மேலும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீர்வரத்து குறைந்த பின்னரே பரிசல் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b