உயிர் காக்க தன்னுயிரைத் தீயிட்டு ஈகம் புரிந்த புரட்சிப்பெண் செங்கொடி – சீமான் புகழாரம்!
தமிழ்நாடு, 28 ஆகஸ்ட் (ஹி.ச.) பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக தன்னுயிரை ஈகம் செய்த செங்கொடியை நினைவுகூர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அடுத்தவரின் உயிரைக் காக்க தன்னுயிரைத
சீமான்


தமிழ்நாடு, 28 ஆகஸ்ட் (ஹி.ச.)

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்காக தன்னுயிரை ஈகம் செய்த செங்கொடியை நினைவுகூர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், அடுத்தவரின் உயிரைக் காக்க தன்னுயிரைத் தீயிட்டு ஈகம் புரிந்த முதல் அரசியல் புரட்சிப்பெண்” என செங்கொடியை புகழ்ந்துள்ள சீமான், தன்னுடைய மூன்று அண்ணன்மார்களின் உயிர் தூக்குக் கயிற்றின் எதிரே நிற்கும்போது, தன்னுடைய உயிரைக் கொடுத்தாவது அவர்களின் உயிரைக் காக்க வேண்டும் என்ற நோக்கில் தனது உடலுக்குத் தீ வைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழர் பண்பாட்டு மரபில் தன்னைச் சார்ந்தவர்களின் நலனுக்காக தம்முயிரைத் துறந்து தெய்வங்களான தமிழின முன்னோர்களைப் போல, இனத்தின் விடுதலைக்காக இன்னுயிரை ஈந்து உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்துள்ள “இனத்தின் காவல் தெய்வம்” என செங்கொடியை சீமான் குறிப்பிட்டுள்ளார்.

தம்முயிரையே ஈகமாக வழங்கிய அவரது புனிதப் போராட்டத்தின் மூலம் எழுவர் விடுதலைக்கு வித்திட்ட வீரத்தமிழச்சி தங்கை செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்துவோம் என்றும் சீமான் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P