பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் 54-ம் ஆண்டு திருவிழா இன்று கோலாகல தொடக்கம்!!
சென்னை, 29 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை பெசன்ட் நகரில் பிரசித்தி பெற்று விளங்கும் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 54-ம் ஆண்டு ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாகை வேளாங்கண்ணி பேராலயத்தில் செப
traffic diversion announced


சென்னை, 29 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை பெசன்ட் நகரில் பிரசித்தி பெற்று விளங்கும் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 54-ம் ஆண்டு ஆண்டு பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நாகை வேளாங்கண்ணி பேராலயத்தில் செப்டம்பர் 8-ம் தேதி மாதா பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னை பெசன்ட் நகர் திருத்தலத்திலும் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு திருவிழா இன்று ஆகஸ்ட் 29-ம் தேதி தொடங்கி வருகிற செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இன்று மாலை 4.30 மணியளவில் திருத்தல வளாகத்தில் அமைந்துள்ள 75 அடி உயர கொடிக்கம்பத்தில் அன்னையின் திருவுருவம் தாங்கிய 12 அடி நீள கொடி ஏற்றப்படுகிறது.

கொடியேற்ற நிகழ்ச்சியை தொடர்ந்து நற்கருணை தேர் பவனி மற்றும் திருப்பலி நடைபெறும் என திருத்தல பங்குத்தந்தை அறிவித்துள்ளார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி செப்டம்பர் 7-ம் தேதி மாலை நடைபெற உள்ளது.

விழாவையொட்டி பெசன்ட் நகர் திருத்தலம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

திருவிழா நாட்களில் தினமும் சிறப்பு திருப்பலி, செபமாலை, பிரார்த்தனைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே கொடியேற்ற விழா மற்றும் தேர் திருவிழாவை முன்னிட்டு பெசன்ட் நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து காவல் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழா 2025, வருகின்ற 29.08.2025 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி 08.09.2025 தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. கூட்ட நெரிசலைப் பொறுத்து, தேவைபட்டால், போக்குவரத்து மாற்றம் பின்வரும் தேதிகளில் 29.08.2025, 31.08.2025, 01.09.2025, 07.09.2025, 08.09.2025 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்படும்.

திரு.வி.க.பாலத்திலிருந்து பெசன்ட் அவென்யு சாலை வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் ஆவின் பூங்காவில் இருந்து தடை விதிக்கப்பட்டு, அதற்கு பதிலாக எல்.பி.சாலை வழியாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டும்.

7th அவென்யு மற்றும் எம்.ஜி.சாலை சந்திப்பிலிருந்து அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.

எம்.எல். பூங்காவிலிருந்து பெசன்ட் அவென்யூ வழியாக பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தை நோக்கிச் செல்லும் மாநகர பேருந்துகள் தடைசெய்யப்பட்டுள்ளன. மேலும், எல்.பி. சாலை இடதுபக்கம் திரும்பி சாஸ்திரி நகர் 1வது அவென்யூ வழியாக வலது பக்கம் திரும்பி சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலையில் இடதுபக்கம் திரும்பி எம்.ஜி. சாலை வழியாக இடதுபக்கம் திரும்பி பெசன்ட் நகர் 1வது பிரதான சாலை வழியாக பேருந்து நிலையத்தை அடையலாம்.

பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திலிருந்து திருவான்மியூர் மற்றும் அடையாறு சிக்னல் நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள் பெசன்ட் நகர் 1வது அவென்யு, சாஸ்திரி நகர் 1வது அவென்யு வழியாகத் திருப்பிவிடப்பட்டு, பின்னர் இடது புறம் சாஸ்திரி நகர் 1 மெயின் ரோடு வழியாக சென்று, பின்னர் வலதுபுறம் திரும்பி எம்.ஜி.சாலை வழியாக எல்.பி.சாலையை அடைந்து தங்கள் இலக்கை அடைய வேண்டும்.பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b