7 நாட்களில் 17.61 லட்சம் வீடுகளுக்கு சென்ற TDP நிர்வாகிகள் - அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கும் ‘வீடு வீடாக TDP’ நிகழ்ச்சி
அமராவதி , 03 ஆகஸ்ட் (ஹி.ச.) ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடைபெற்று வரும் ‘வீடு வீடாக TDP – 2 ஆண்டுகள் நம்பிக்கை, வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள்’ என்ற மக்கள் தொடர்பு நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக,அமைச்சர
A


அமராவதி , 03 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடைபெற்று வரும் ‘வீடு வீடாக TDP – 2 ஆண்டுகள் நம்பிக்கை, வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள்’ என்ற மக்கள் தொடர்பு நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக,அமைச்சர் லோகேஷ் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் கடந்த 7 நாட்களில் மாநிலம் முழுவதும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் 17 லட்சத்து 61 ஆயிரத்து 197 வீடுகளுக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்துள்ளதாக கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் இந்த நிகழ்ச்சி தீவிரமாக நடைபெற்றது.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடு வீடாக சென்று அரசின் கடந்த 2 ஆண்டுகால செயல்பாடுகளை மக்களிடம் விளக்கினர்.

ஞாயிற்றுக்கிழமை மட்டும் 3 லட்சத்து 1 ஆயிரத்து 197 வீடுகளில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது, விவசாயிகள் நலன், பெண்கள் முன்னேற்றம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்பாடு, வெளிப்படையான நிர்வாகம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் செயல்பாடுகள் குறித்து தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் பல்லா ஸ்ரீனிவாச ராவ், மாவட்ட தலைவர்கள், நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுடன் தொலைபேசி மாநாடு மூலம் ஆய்வு நடத்தினார்.

ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

இதற்கிடையே, தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் நாரா லோகேஷ், தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கண்காணித்து வருகிறார். தொகுதி வாரியாக நடைபெறும் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து, கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

மக்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பு, அரசின் மீது உள்ள நம்பிக்கையை காட்டுவதாக நாரா லோகேஷ் கூறியுள்ளார்.

இதே வேகத்தில் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்து அரசின் பணிகளை விளக்க வேண்டும் என்றும் அவர் கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA