டெல்லி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தம்பதி பலி
புதுடெல்லி, 03 ஆகஸ்ட் (ஹி.ச) வடகிழக்கு டெல்லியின் உஸ்மான்பூர் பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் 32 வயதான டிங்கு மற்றும் அவரது மனைவி 30 வயதான
Couple killed after house roof collapses near Delhi


புதுடெல்லி, 03 ஆகஸ்ட் (ஹி.ச)

வடகிழக்கு டெல்லியின் உஸ்மான்பூர் பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் 32 வயதான டிங்கு மற்றும் அவரது மனைவி 30 வயதான ஊர்மிளா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் உஸ்மான்பூர் எல்லைக்குட்பட்ட கோண்டா பகுதியில் உள்ள ஜேபி நகர் எனப்படும் ஜெய்பிரகாஷ் நகரில் நிகழ்ந்துள்ளது.

வீட்டின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் தம்பதியினர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

இது குறித்து மூத்த நிலைய அதிகாரி சுனில் சாகர் கூறுகையில்,

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டதாக தெரிவித்தார்.

டிங்கு (32) மற்றும் ஊர்மிளா (30) ஆகிய தம்பதியினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தனர்.

அவர்களது உடல்களை பொதுமக்களும் காவல்துறையினரும் மீட்டு உடனடியாக ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் என்றார்.

மருத்துவமனையில் அவர்களை பரிசோதித்த தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சந்தோஷ், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தார்.

கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்த விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

Hindusthan Samachar / vidya.b