Enter your Email Address to subscribe to our newsletters

ஜம்மு, 03 ஆகஸ்ட் (ஹி.ச)
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.9 ஆக பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை 1 மணி 37 நிமிடம் 14 வினாடிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் மையம் 5 கிலோமீட்டர் ஆழத்தில், 33.329 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 75.018 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 700 கிலோமீட்டர் ஆழம் வரை நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடும்.
அறிவியல் பகுப்பாய்வுக்காக இந்த வரம்பு ஆழமற்ற, இடைநிலை மற்றும் ஆழமான என மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆழமற்ற நிலநடுக்கங்களானது அதிக ஆபத்து வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஏனெனில் இதன் அதிர்வு அலைகள் மேற்பரப்பை அடைய குறைந்த தூரமே பயணிக்க வேண்டியிருப்பதால், நில அதிர்வு வலுவாக இருக்கும் என்பதோடு, அதிக சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தக்கூடும்.
Hindusthan Samachar / vidya.b