ஈரோடு ஓடாநிலையில் தீரன் சின்னமலை சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மரியாதை
ஈரோடு, 03 ஆகஸ்ட் (ஹி.ச.) கொங்கு மண்டலத்தின் விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவை போற்றும் வகையில், ஈரோட்டில் அவரது திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இன்று அவரது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சமூ
ஈரோடு ஓடாநிலையில் தீரன் சின்னமலை சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மரியாதை


ஈரோடு, 03 ஆகஸ்ட் (ஹி.ச.)

கொங்கு மண்டலத்தின் விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவை போற்றும் வகையில், ஈரோட்டில் அவரது திருவுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இன்று அவரது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சமூக ஆர்வலர்களுக்கும் அவரது மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் உத்தரவைத் தொடர்ந்து, கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் அமைந்துள்ள தீரன் சின்னமலை மணிமண்டப வளாகத்தில் உள்ள சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து தீரத்துடன் போரிட்டு, நாட்டுக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த மாவீரன் தீரன் சின்னமலையின் தியாக வரலாறு என்றும் போற்றப்பட வேண்டியது என்று கூறி அவர் புகழஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்வின் போது அவருடன் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b