ஜோகினிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை- அமைச்சர் பொன்னம் பிரபாகர் அறிவிப்பு
ஐதராபாத் , 03 ஆகஸ்ட் (ஹி.ச.) லால்தர்வாஜா சிம்மவாஹினி மகாகாளி போனாலு விழாவில் பங்கேற்ற தெலங்கானா மாநில பிசி நலத்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர், ஜோகினி பெண்களின் நலன் குறித்து முக்கிய அறிவிப்புகளை தனது அறிக்கையில் வெளியிட
A


ஐதராபாத் , 03 ஆகஸ்ட் (ஹி.ச.)

லால்தர்வாஜா சிம்மவாஹினி மகாகாளி போனாலு விழாவில் பங்கேற்ற தெலங்கானா மாநில பிசி நலத்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர், ஜோகினி பெண்களின் நலன் குறித்து முக்கிய அறிவிப்புகளை தனது அறிக்கையில் வெளியிட்டார்.

அறிக்கையில் அவர் கொடுத்த முதலாவது,

ஜோகினி பெண்களுக்கு சிறப்பு அடையாள அட்டைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவர்களுக்கு எதிர்காலத்தில் எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தெலங்கானா மக்களுக்கு இது சிறப்பான நாள் என்றும், அம்மன் அருளால் மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்து மக்கள் அனைவரும் வளமுடன் வாழ வேண்டும் என்றும் அவர் வேண்டிக்கொண்டார்.

தெலங்கானாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் போனாலு திருவிழாவை அரசு மிகுந்த முக்கியத்துவத்துடன் நடத்தி வருவதாக அமைச்சர் கூறினார். அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் திரண்ட நிலையிலும், பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் அதிகாரிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்ததாக அவர் பாராட்டு தெரிவித்தார்.

ஜோகினி பெண்களுக்கு சமூகத்தில் உரிய அங்கீகாரம் வழங்கும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், எதிர்காலத்தில் அவர்களை நகராட்சிகளில் கோ-ஆப்ஷன் உறுப்பினர்களாக நியமிப்பது குறித்தும் பரிசீலித்து வருவதாகவும் பொன்னம் பிரபாகர் தெரிவித்தார்.

மேலும், வரும் ஆண்டுகளில் தேவாதாயம், உள்துறை மற்றும் நகராட்சி துறைகளின் ஒருங்கிணைப்புடன் போனாலு விழா ஏற்பாடுகள் மேலும் சிறப்பாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

ஜோகினி பெண்களுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி விரைவில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA