கடலூர் அருகே பேருந்து மீது கார் மோதி விபத்து - 2 பேர் பலி,5 பேர் படுகாயம்
கடலூர், 30 ஆகஸ்ட் (ஹி.ச) சென்னையில் இருந்து கடலூர் நோக்கி கார் ஒன்று இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. அன்னவெளி பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த அரசு பேருந்து மீது அதிவேகமாக மோதியதாக முதற்கட்ட தகவல்கள் தெரி
கடலூர் அருகே பேருந்து மீது கார் மோதி விபத்து -  2 பேர் பலி : 5 பேர் படுகாயம்


கடலூர், 30 ஆகஸ்ட் (ஹி.ச)

சென்னையில் இருந்து கடலூர் நோக்கி கார் ஒன்று இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது.

அன்னவெளி பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த அரசு பேருந்து மீது அதிவேகமாக மோதியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கோர விபத்தில் கார் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த பரசுராமன் (வயது 56) மற்றும் விக்னேஷ் (வயது 28) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் காரில் பயணித்த ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

அவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேளாங்கண்ணி மாதா கோயில் கொடியேற்ற விழாவுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b