மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - நீர்மட்டம் 90 அடியை கடந்தது
சேலம், 30 ஆகஸ்ட் (ஹி.ச.) சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 6702 கன அடியில் இருந்து 6887 கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுத
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - நீர்மட்டம் 90 அடியை கடந்தது


சேலம், 30 ஆகஸ்ட் (ஹி.ச.)

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 6702 கன அடியில் இருந்து 6887 கன அடியாக உயர்ந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. நேற்று 89.95 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 90.30 அடியாக உயர்ந்துள்ளது.

இதேபோல் அணையின் மொத்த நீர் இருப்பு 52.99 டி.எம்.சி.யாக அதிகரித்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 120 அடி என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தற்போது வினாடிக்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்படுகிறது.

பிலிகுண்டுலுவுக்கு வரும் தண்ணீரின் அளவு 11,000 கன அடியைத் தாண்டியுள்ளதால், நாளை மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வரும் நாட்களில் வேகமாக உயர வாய்ப்புள்ளது.

Hindusthan Samachar / vidya.b