Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் தென்தொரசலூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் இன்று தனது இருசக்கர வாகனத்தில் தனது ஒரு வயது குழந்தை தன்வீகா-வை அமர வைத்துக் கொண்டு தென்தொரசலூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது
இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக மூர்த்தியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஒரு வயது குழந்தை தன்வீகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இதில் காயமடைந்த மூர்த்தி சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து வரஞ்சரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அருகே தந்தையுடன் ஆசை ஆசையாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு வயது குழந்தை கார் மோதிய விபத்தில் தூக்கி வீசப்பட்டு தந்தை கண்முன்னே உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN