Enter your Email Address to subscribe to our newsletters

குண்டூர் , 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆலூர் தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ விருபாக்ஷி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அம்பட்டி ராம்பாபு குற்றம் சாட்டியுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், ஆலூர் எம்.எல்.ஏ விருபாக்ஷிக்கு நீதிமன்றம் காவல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், குண்டூரில் செய்தியாளர்களிடம் பேசிய அம்பட்டி ராம்பாபு, கூட்டணி அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்
அப்போது அவர் கூறியதாவது:-
சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகிறது.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீது திட்டமிட்டு கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. கைது நடவடிக்கைகள் மற்றும் வழக்குகளை எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் ஆயுதமாக அரசு பயன்படுத்துகிறது.
ஆலூர் சம்பவத்தில் உண்மையில் தவறு செய்தவர்களை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களை பாதுகாக்க காவல்துறை முயற்சிப்பதாக தெரிகிறது.
கூட்டணி அரசு எடுத்து வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்கள் கவனித்து வருகின்றனர்.
இதுபோன்ற மிரட்டல்களுக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அஞ்சாது.
இவ்வாறு அம்பட்டி ராம்பாபு தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA