ஹரீஷ் ராவ் கோவில் பயணம் குறித்து மகேஷ் குமார் கவுட் கேள்வி- பிஆர்எஸ் மீது க்ஷுத்ர பூஜை குற்றச்சாட்டு
ஐதராபாத் , 04 ஆகஸ்ட் (ஹி.ச.) பிஆர்எஸ் கட்சிக்கு க்ஷுத்ர பூஜைகள் செய்வது ஒரு பழக்கமாகிவிட்டதாக தெலங்கானா காங்கிரஸ் தலைவர் மகேஷ் குமார் கவுட் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள காந்தி பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்
A


ஐதராபாத் , 04 ஆகஸ்ட் (ஹி.ச.)

பிஆர்எஸ் கட்சிக்கு க்ஷுத்ர பூஜைகள் செய்வது ஒரு பழக்கமாகிவிட்டதாக தெலங்கானா காங்கிரஸ் தலைவர் மகேஷ் குமார் கவுட் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள காந்தி பவனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், முன்னாள் அமைச்சர் ஹரீஷ் ராவ் சமீபத்தில் மேற்கொண்ட கோவில் பயணங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்.

அவர் கூறுகையில்,

ஹரீஷ் ராவ் ஜூன் 2-ந்தேதி திருச்சிக்கும், ஜூலை 23-ந்தேதி சிவமொக்காவுக்கும் ஏன் சென்றார் என்பதை விளக்க வேண்டும்.

அந்த தேதிகளில் அவர் எங்கு இருந்தார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இதுதொடர்பாக என்னிடம் ஆதாரங்கள் உள்ளன” என்றார்.

மேலும், பிஆர்எஸ் கட்சி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும் தெலங்கானா மாநிலத்தின் வளர்ச்சிக்கு உரிய கவனம் செலுத்தவில்லை என்று மகேஷ் குமார் கவுட் குற்றம்சாட்டினார்.

தெலங்கானா மாநிலம் பல்வேறு தியாகங்களின் மூலம் உருவானது.

ஆனால், மக்களின் நம்பிக்கையை பிஆர்எஸ் இழந்துவிட்டது. கடந்த ஆட்சியில் செய்த தவறுகளுக்காக அந்த கட்சி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA