விசாகப்பட்டினத்தில் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து அமைக்க உள்ள விளையாட்டு அகாடமி கட்டுமானப் பணிகளுக்கு அமைச்சர் லோகேஷ் அடிக்கல் நாட்டினார்
விசாகப்பட்டினம் , 05 ஆகஸ்ட் (ஹி.ச.) விசாகப்பட்டினம் அரிலோவா அருகே உள்ள தோட்டகருவு பகுதியில் “சென்டர் ஃபார் ஸ்போர்ட்ஸ் எக்ஸலன்ஸ்” என்ற பெயரில் இந்த அகாடமி அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆந்திர மாநில அமைச்சர் ந
A


விசாகப்பட்டினம் , 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

விசாகப்பட்டினம் அரிலோவா அருகே உள்ள தோட்டகருவு பகுதியில் “சென்டர் ஃபார் ஸ்போர்ட்ஸ் எக்ஸலன்ஸ்” என்ற பெயரில் இந்த அகாடமி அமைக்கப்பட உள்ளது.

இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷ் கலந்து கொண்டு கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பி.வி. சிந்து, அவரது குடும்பத்தினர், ஆந்திர மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் மண்டிப்பள்ளி ராம்பிரசாத் ரெட்டி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பூமி பூஜை முடிந்த பின்னர் அகாடமியின் மாதிரி வடிவமைப்பை அமைச்சர் பார்வையிட்டார்.

மேலும், வீரர், வீராங்கனைகளுக்காக ஏற்படுத்தப்பட உள்ள நவீன பயிற்சி வசதிகள், அகாடமியின் நோக்கம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பி.வி. சிந்துவிடம் அமைச்சர் கேட்டறிந்தார். இந்த திட்டம் தொடர்பான ஆடியோ-விசுவல் விளக்கக் காட்சியையும் அவர் பார்வையிட்டார்.

இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு சர்வதேச தரத்திலான பயிற்சி மற்றும் வசதிகளை வழங்கும் வகையிலும் இந்த விளையாட்டு அகாடமி உருவாக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா சீனிவாசராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் கந்தா சீனிவாசராவ், வெலகபுடி ராமகிருஷ்ணபாபு, சாப் தலைவர் அனிமினி ரவிநாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA