15 நிமிடங்களுக்கு மேல் மின்தடை நீடித்தால் தகவல் தர வேண்டும் - அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி உத்தரவு
சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச) தமிழகத்தில் மின்தடை பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் புதிய அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி, தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் 15 நிமிடங்களுக்கு மேல் மின
Minister Nirmal Kumar issues a stern directive


சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச)

தமிழகத்தில் மின்தடை பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் புதிய அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

இதன்படி, தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் 15 நிமிடங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்பட்டால், அது குறித்த தகவலை சம்பந்தப்பட்ட மின்வாரிய பொறியாளர்கள் உடனடியாக தலைமை அலுவலகத்திற்கும், உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதும், மின்தடை குறித்த புகார்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதுமே இந்த உத்தரவின் நோக்கம் என கூறப்படுகிறது.

இதுவரை சிறு சிறு மின்தடைகள் குறித்த தகவல்கள் உயர் மட்டத்திற்கு செல்லாமல் இருந்த நிலையில், இனி ஒவ்வொரு நிமிட மின்தடையும் கண்காணிக்கப்படும்.

15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் மின்தடைக்கான காரணம் என்ன, அதை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, மின்சாரம் எப்போது மீண்டும் வழங்கப்படும் என்ற முழு விவரத்தையும் பொறியாளர்கள் தலைமைக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.

இதன் மூலம் பொறியாளர்களின் பணியில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்க முடியும் என அரசு நம்புகிறது.

Hindusthan Samachar / vidya.b