நீட் வினாத்தாள் கசிவு காரணத்திற்கு பிரதமரும் உள்துறை அமைச்சரும் மன்னிப்பு கேட்க வேண்டும் - காங்கிரஸ் எம்.பி. சுக்தேவ் பகத் வலியுறுத்தல்
புதுடெல்லி, 05 ஆகஸ்ட் (ஹி.ச.) நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் பரவலான போராட்டங்கள் நடைபெற்றதை அடுத்து, தர்மேந்திர பிரதான் பதவி விலகிய நிலையில், இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கி
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: பிரதமரும் உள்துறை அமைச்சரும் மன்னிப்பு கேட்க வேண்டும் - காங்கிரஸ் எம்.பி. சுக்தேவ் பகத் வலியுறுத்தல்


புதுடெல்லி, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் பரவலான போராட்டங்கள் நடைபெற்றதை அடுத்து, தர்மேந்திர பிரதான் பதவி விலகிய நிலையில், இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன.

இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

பொதுத் தேர்வுகள் (முறைகேடான வழிகளைத் தடுத்தல்) திருத்த மசோதா, 2026, மக்களவையில் ஆகஸ்ட் 5-ம் தேதி நிறைவேற்றப்பட்டு, ஆகஸ்ட் 7-ம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த போதிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டம் அரசியல் பிளவை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு வினாத்தாள் கசிவுக்கான அடிப்படைக் காரணங்களைக் களையாமல், அவசரகதியில் திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

மாணவர் போராட்டங்களைத் தணிப்பதற்காகவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டதே தவிர, உருப்படியான சீர்திருத்தங்களைச் செய்வதற்காக அல்ல என்றும் அவை குற்றம் சாட்டுகின்றன.

ஆனால், 2024-ம் ஆண்டு சட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து பெற்ற அனுபவத்திலிருந்து பாடம் கற்க அரசு தயாராக இருப்பதையே இந்த திருத்தங்கள் காட்டுவதாக அரசு தரப்பு வாதிடுகிறது.

தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், தகுதியான விண்ணப்பதாரர்களின் நலன்களைப் பாதுகாக்கவுமே புதிய விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை அரசு கையாண்ட விதம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முறைப்படி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. சுக்தேவ் பகத் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,

நீட் தேர்வு போராட்ட சூழ்நிலை கையாளப்பட்ட விதத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால் தர்மேந்திர பிரதான் சம்பந்தப்பட்ட இந்த வினாத்தாள் கசிவு விவகாரம் முழுவதையும் பார்த்தால், அவர் ஏதோ அசாதாரண சாதனை புரிந்தது போல பெருமிதத்துடன் இருந்ததாகத் தெரிகிறது.

இது முற்றிலும் முரண்பாடானது. இன்று வரை பிரதமர் மற்றும் அமைச்சரவை உட்பட ஒட்டுமொத்த அரசாங்கமும் பொறுப்பேற்கத் தவறிவிட்டது. மாறாக, அவர்கள் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதுடன், நாடாளுமன்றத்தையும் தவிர்த்து வருகிறார்கள்.

என்று தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b