பெண்களின் நலனுக்கான முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன – அமைச்சர் கீர்த்தனா வரவேற்பு
சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.) 2026–27ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை முன்னிறுத்திய முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதள
கீர்த்தனா


சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

2026–27ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை முன்னிறுத்திய முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.560 கோடியும், அண்ணனின் சீர்திட்டம் திட்டத்தின் கீழ் பெண்களின் திருமண நலனுக்காக 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்க ரூ.812 கோடியும் ஒதுக்கப்பட்டிருப்பது பெண்களின் மனதை வெல்லும் அறிவிப்புகள் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு குழந்தையின் பிறப்பையும் உறவின் பாசத்துடன் கொண்டாடும் திட்டமாகவும், ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் முயற்சியாகவும் இந்த அறிவிப்புகள் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், ஒரு முதலமைச்சராக மட்டுமல்லாமல், ஒவ்வொரு பெண்ணின் அண்ணனாகவும், ஒவ்வொரு குழந்தையின் தாய்மாமனாகவும் அக்கறையுடன் செயல்பட்டு வருவதாகவும், தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றி வருவதாகவும் கீர்த்தனா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்ணனின் ஒரு தங்கையாக இந்த அறிவிப்புகளைப் பார்க்கும்போது பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

தமிழ்நாட்டு பெண்களின் சார்பில் முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam