Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 06 ஆகஸ்ட் (ஹி.ச.)
கார்ஸ் 327 நிறுவனத்தின் சார்பில் ஆகஸ்ட் அதிரடி திருவிழா யூஸ்டு கார் மேளா திருவிழா ஆகஸ்ட் 6ம் தேதி, துவங்கி 10ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் கோவை சிங்காநல்லூர் வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கார்ஸ் 327 உரிமையாளர் விஷ்ணு வேணுகோபால் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவது....
ஆடி தள்ளுபடி விற்பனையை எதிர்பார்த்த வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், இந்த கண்காட்சி ஆடி மாதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட தரமான யூஸ்டு கார்கள் இருப்பதாகவும், யூஸ்டு கார்கள் தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக பைனான்ஸ் ஏற்பாடு செய்து தருவதாகும், வங்கி கடன் உதவி மற்றும் தனியார் கடனுதவி உடனுக்குடன் செய்து கொடுப்பதாகவும், வாகனங்களுக்கு இன்சூரன்ஸ், சர்வீஸ் உள்ளிட்ட அனைத்தும் உடனடியாக செய்து கொடுப்பதாகவும், ரூபாய் ஒரு லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை கார்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்று இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் வாடிக்கையாளர்கள் யூஸ்ட் கார்களை வாங்கும் பொழுது கார் மெக்கானிக்கை அழைத்து வந்து நன்கு சோதனை செய்து பின்னர் பெற்று கொள்ளுவது வாடிக்கையாளர்களுக்கும், எங்களுக்கும் இடையே உள்ள நல்ல உறவை நீட்டிக்கும் என்றார்.
மேலும் வாடிக்கையாளர்களின் பழைய கார்கள் எந்த நிலையில் இருந்தாலும் அதனை ஆய்வு செய்து நல்ல விலைக்கு, எக்ஸ்சேஞ் முறையில் பெற்று கொள்ளவும் இங்கு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.
எனவே வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை தவற விட்டு விட வேண்டாம் என்று கேட்டு கொண்டாகோவையில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்த, ஆகஸ்ட் அதிரடி திருவிழா, ஆகஸ்ட் 6ம் தேதி முதல், 10ம் தேதிவரை நடைபெற உள்ளது.
Hindusthan Samachar / Durai.J