திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள் அமைதிப் பேரணி
சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஆகஸ்ட் 7, 2026) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை ஓமந்த
திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள் அமைதிப் பேரணி


சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஆகஸ்ட் 7, 2026) அனுசரிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை பிரம்மாண்ட அமைதிப் பேரணி நடத்தப்பட்டது.

மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து இந்த அமைதிப் பேரணியில் பங்கேற்றனர்.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைஞரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சென்னை மட்டுமின்றி திருச்சி, காஞ்சிபுரம், தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கலைஞரின் சிலைகளுக்கும், உருவப்படங்களுக்கும் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் பல்வேறு பொதுநல உதவிகளை திமுகவின் பல்வேறு அணிகள் வழங்கி வருகின்றன.

Hindusthan Samachar / vidya.b