அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம் - உதயநிதி ஸ்டாலின்
சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாட்டின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவராகவும், ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றிய பெருமைக்குரியவராகவும் திகழ்ந்த ''கலைஞர்'' கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவராக கிட்டத்தட்ட
அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம் -  உதயநிதி ஸ்டாலின்


சென்னை, 07 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாட்டின் மிக முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவராகவும், ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றிய பெருமைக்குரியவராகவும் திகழ்ந்த 'கலைஞர்' கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவராக கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் (1969 முதல் 2018 வரை) பொறுப்பு வகித்தார்.

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியவர். நவீனத் தமிழகத்தை உருவாக்கிய சிற்பி என தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 8ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்

தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கருணாநிதியின் வழிநின்று தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம் என தெரிவித்துள்ளார்.

இன்று எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது,

‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர்

மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b