Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதையொட்டி, இன்று முதல் ஆறு நாட்களுக்கு பக்தர்கள் கோவில் பகுதியில் தங்கி வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அதிகாலை 4 மணி முதலே பாபநாசம் வாகனச் சோதனைச் சாவடியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்குச் செல்ல நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
சோதனைச் சாவடியில் வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பின்னரே கோவில் பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி பக்தர்களின் பாதுகாப்புக்காக 230 வனத்துறையினர், 650 காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் என சுமார் 1,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam