Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 09 ஆகஸ்ட் (ஹி.ச.)
மதுரை மாநகரின் முக்கிய போக்குவரத்து வழித்தடமான அம்மா பாலத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படுகிறது.
அம்மா பாலத்தின் இருபுறமும் உள்ள நுழைவுப் பகுதிகளை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இந்த போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி பயணிக்கும் வகையில், இந்த மாற்றம் இன்று சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு, நாளை முதல் முழுமையாக அமலுக்கு வருகிறது.
இதன்படி, ஆரப்பாளையம் ஜல்லிக்கட்டு ரவுண்டானாவில் இருந்து அம்மா பாலம் வழியாக தத்தனேரி சாலைக்கு செல்லும் வழியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல், காளவாசல் சாலையில் இருந்து அம்மா பாலம் வழியாக ஆரப்பாளையம் ஜல்லிக்கட்டு ரவுண்டானாவை நோக்கி செல்லும் வழியில், இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
எனவே, வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு அளித்து, மாற்றுப் பாதைகளை பயன்படுத்தி பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Hindusthan Samachar / vidya.b