மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம்- முதலமைச்சர் விஜய்க்கு கனிமொழி கண்டனம்
தமிழ்நாடு, 10 செப்டம்பர் (ஹி.ச.) அம்பாசமுத்திரத்தில் திருமண மண்டப உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி முதலமைச்சர் வி
கனிமொழி


தமிழ்நாடு, 10 செப்டம்பர் (ஹி.ச.)

அம்பாசமுத்திரத்தில் திருமண மண்டப உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி முதலமைச்சர் விஜய்க்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

அம்பாசமுத்திரத்தில் திருமண மண்டப உரிமையாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள மற்றுமொரு அதிர்ச்சிச் செய்தி வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

முந்தைய ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என மக்களிடம் வாக்கு கேட்டு ஆட்சிக்கு வந்துவிட்டு, தற்போது மக்களை உயிர் பயத்துடன் வாழும் நிலைக்குத் தள்ளியுள்ளதாக முதலமைச்சர் விஜய்யை கனிமொழி விமர்சித்துள்ளார்.

மேலும், முதலமைச்சருக்கு காவல்துறையை கையாளத் திறன் இல்லை என்றால், அதைத் திறம்பட கையாளக்கூடிய வேறு யாரிடமாவது ஒப்படைத்துவிட்டுப் போகலாம் என்றும், மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என்றும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam