ரூ.20 ஆயிரம் கடன் விவகாரத்தில் மருத்துவமனைக்குச் செல்லத் தடுக்கப்பட்ட பழங்குடியின பெண் பிரசவத்தின் போது உயிரிழப்பிற்கு விசாரணை வேண்டும் – சசிகாந்த் செந்தில்
தமிழ்நாடு, 10 செப்டம்பர் (ஹி.ச.) காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த பழங்குடியின பெண் தேன்மொழி, ரூ.20 ஆயிரம் கடன் விவகாரத்தில் மருத்துவமனைக்குச் செல்லத் தடுக்கப்பட்டு, வேலை செய்யும் இடத்திலேயே பிரசவத்தின்போது உயிரிழந்ததாகக் கூ
சசிகாந்த்


தமிழ்நாடு, 10 செப்டம்பர் (ஹி.ச.)

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த பழங்குடியின பெண் தேன்மொழி, ரூ.20 ஆயிரம் கடன் விவகாரத்தில் மருத்துவமனைக்குச் செல்லத் தடுக்கப்பட்டு, வேலை செய்யும் இடத்திலேயே பிரசவத்தின்போது உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இந்த குற்றச்செயலுக்கு காரணமான நபர் மீது காவல்துறை உடனடியாகவும் நேர்மையாகவும் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட நபர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணமும் நீதியும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பழங்குடியின மக்களின் உரிமைகளும் கண்ணியமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சசிகாந்த் செந்தில் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam