பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு மாறாது – பிரதமர் மோடி
புதுடெல்லி, 11 செப்டம்பர் (ஹி.ச.) 9/11 பயங்கரவாத தாக்குதல்களின் 25-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 25 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொடூரமான 9/1
மோடி


புதுடெல்லி, 11 செப்டம்பர் (ஹி.ச.)

9/11 பயங்கரவாத தாக்குதல்களின் 25-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,

25 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொடூரமான 9/11 தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துகிறோம். அத்தாக்குதலால் வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்களது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

உலகம் முழுவதும் எண்ணற்ற உயிர்களை பயங்கரவாதம் பறித்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடான இந்தியா, பல தசாப்தங்களாக பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் உள்ளது.

பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்ந்து புதிய வடிவங்களை எடுத்து வந்தாலும், அனைத்து வகையான பயங்கரவாதத்திற்கும் எதிரான நமது உறுதியும் நிலைப்பாடும் மாறாது. இந்த கொடூரத்தை எதிர்த்துப் போராடும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா தனது ஆதரவைத் தெரிவிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2014-ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள 9/11 நினைவிடம் மற்றும் அருங்காட்சியகத்திற்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P