Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 செப்டம்பர் (ஹி.ச.)
மிசா விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் விஜய் பேசியதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நேற்று திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் ஒரு சில திமுக நிர்வாகிகள் முதலமைச்சர் விஜய் மற்றும் தவெகவினரை கொச்சைப்படுத்தி பேசி இருந்தனர். இந்த நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா அவர்கள் பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்,
திமுக தலைவர்களில் சிலர் தொடர்ந்து பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவதும் அதைக் கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரிப்பதும் சகிக்க முடியவில்லை.
அமைச்சர் நிர்மல் குமார் பேசியதை கண்டியுங்கள். அவருடைய தாயாரை இழிவு படுத்துவதை எப்படி திமுக தலைவர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
பொதுவெளியில் பெண்களை இழிவு படுத்தி பேசுபவர் யாராக இருந்தாலும் அந்தந்த கட்சி தலைமை கண்டிக்கவும், ஒழுங்குபடுத்தவும் முன்வர வேண்டும்.
சில திமுகவினர் கண்ணியம் தவறுவது தொடர்கிறது. கட்டுப்பாடு நிலை நிறுத்தும் கடமையை திமுக. தலைவர் செய்வார் என்று நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN