Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 15 செப்டம்பர் (ஹி.ச)
சென்னை அயனாவரத்தில் பெண் காவலரிடம் தமிழக வெற்றி கழக நிர்வாகி ஒருவர் அத்துமீறியதாகவும், அவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார் காவல் நிலையத்துக்கு நேரில் சென்று அந்த நிர்வாகியை அழைத்துச் சென்றதாகவும் திமுக ஐடி விங் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக திமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில்
வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழ்நாட்டில் சீருடையில் இருக்கும் பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளது.
சமூக வலைதளங்களில் தங்களைக் கேள்வி கேட்கும் பெண்களை தவெக ஆதரவாளர்கள் ஆபாசமாக விமர்சித்து வருவதாகவும், தற்போது அதிகாரம் கைக்கு வந்த நிலையில் சீருடையில் இருக்கும் பெண் காவலர்களிடமும் அத்துமீறத் தொடங்கிவிட்டதாகவும் திமுக ஐடி விங் குற்றம்சாட்டியுள்ளது.
அயனாவரத்தில் பெண் காவலரிடம் அத்துமீறியதாகக் கூறப்படும் தவெக நிர்வாகியை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும், பொதுமக்களிடம் சிக்கிய அந்த நபரை காப்பாற்றும் வகையில் தவெக சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார் காவல் நிலையத்துக்கே நேரில் சென்று அழைத்துச் சென்றதாகவும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவைச் சேர்ந்த நிர்வாகி பெண் காவலரிடம் அத்துமீறியதாகக் கூறப்படும் சம்பவத்தில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரே காவல் நிலையத்துக்குச் சென்று அவரை மீட்டுச் செல்வதாகவும் திமுக ஐடி விங் விமர்சித்துள்ளது.
மேலும், சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு அரசையும் முதலமைச்சர் விஜயையும் கடுமையாக விமர்சித்துள்ள திமுக ஐடி விங், லண்டனில் நடைபெற்ற கார் பந்தயத்தை பார்வையிட்டு சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிடுவதில் முதலமைச்சர் விஜய் கவனம் செலுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக ஐடி விங் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ