Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 15 செப்டம்பர் (ஹி.ச.)
கிராமப்புற இந்தியா முழுவதும் ஓய்வூதிய விழிப்புணர்வு மற்றும் ஓய்வுக்கால பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் ‘பென்ஷன் சகி’கள் வலையமைப்பை நிறுவி ஆதரிப்பதற்காக ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ரோஹித் கன்சல் முன்னிலையில், ஊரக வளர்ச்சித் துறையின் இணைச் செயலாளர் அமித் சுக்லா மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் சுமீத் கௌர் கபூர் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.
தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள விரிவான சமூக நிறுவன வலையமைப்பை இந்த கூட்டாண்மை பயன்படுத்திக் கொள்ளும்.
இதில் வங்கி தொடர்பாளர் சகிகள் மற்றும் பிற பயிற்சி பெற்ற சமூக வள நபர்கள் அடங்குவர்.
கிராமப்புறங்களில் முறையான நிதி ஆலோசனை மற்றும் ஓய்வூதிய திட்டமிடல் சேவைகளுக்கான அணுகல் குறைவாக இருப்பதை நிவர்த்தி செய்ய, பெண்கள் தலைமையிலான சுய உதவிக் குழுக்களின் நிறுவன கட்டமைப்பை பயன்படுத்த இந்த முயற்சி திட்டமிட்டுள்ளது. பென்ஷன் சகிகள் நம்பகமான சமூக ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவார்கள்.
குறிப்பாக சுய உதவிக் குழு உறுப்பினர்கள், கிராமப்புற பெண்கள், லட்சாதிபதி தீதிகள் மற்றும் பிற பங்கேற்பாளர்களை இலக்காகக் கொண்டு அவர்கள் செயல்படுவார்கள்.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வுக்கால திட்டமிடல் குறித்த தகவல்களை வழங்குதல், சேர்க்கைக்கு வழிவகை செய்தல் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான சேவைகளை புரிந்துகொள்ள வீடுகளுக்கு உதவுதல் ஆகியவை இவர்களின் பணிகளில் அடங்கும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ரோஹித் கன்சல்,
சமூக பாதுகாப்பு என்பது பாதிப்புகளுக்கு எதிரான பாதுகாப்பு மட்டுமல்ல. நிலையான பொருளாதார முன்னேற்றத்தை தொடர்வதற்கான நம்பிக்கையையும், மீள்திறனையும் குடும்பங்களுக்கு வழங்குவதும் ஆகும்.
கிராமப்புற சுய உதவிக் குழு பங்கேற்பாளர்களின் தனித்துவமான சேமிப்பு முறைகள், வாழ்வாதார சுழற்சிகள் மற்றும் இடர் சுயவிவரங்கள் இதில் மேம்படும். மேலும் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் ஓய்வூதிய விழிப்புணர்வு மற்றும் நிதி கல்வியறிவை கட்டமைப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. கிராமப்புற மக்கள் தங்கள் நீண்டகால நிதி பாதுகாப்பு குறித்து தகவலறிந்த முடிவுகளை எடுக்க தெளிவான மற்றும் வெளிப்படையான தகவல்களைப் பெறுவதை உறுதி செய்வது அவசியம் ஆகும்.
ஆயுட்காலம் அதிகரித்து வருவது மற்றும் மக்கள்தொகை மாற்றங்களுக்கு மத்தியில் ஓய்வூதிய திட்டமிடலின் வளர்ந்து வரும் முக்கிய காரணி ஆகும். தற்போது முறையான ஓய்வூதிய மற்றும் சமூக பாதுகாப்பு கட்டமைப்புகளுக்கு வெளியே உள்ள கிராமப்புற குடும்பங்களிடையே தேசிய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட ஓய்வூதிய தயாரிப்புகள் குறித்த விழிப்புணர்வையும், அவற்றை ஏற்றுக்கொள்வதையும் இந்த ஒத்துழைப்பு கணிசமாக அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b