Enter your Email Address to subscribe to our newsletters

திருமலை , 16 செப்டம்பர் (ஹி.ச.)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 61 ஆயிரத்து 361 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 18 ஆயிரத்து 722 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
கோவில் உண்டியலில் ரூ.4 கோடியே 70 லட்சம் காணிக்கை செலுத்தப்பட்டது. 3 லட்சத்து 20 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 1 லட்சத்து 84 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றனர்.
மேலும், அஸ்வினி மருத்துவமனையில் 3 ஆயிரத்து 189 பேர் மருத்துவ சிகிச்சை பெற்றனர்.
தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்துக்கு சென்ற பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA