Enter your Email Address to subscribe to our newsletters

சித்தூர் , 17 செப்டம்பர் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு, நேற்று அதிகாலை காரில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது.
காரில் பயணம் செய்த பெண் ஒருவர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஓட்டுநர் உள்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த சித்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அதிகாலை நேரத்தில் ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் அல்லது கவனக்குறைவு காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA