Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 17 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 9 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டெங்கு பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும், டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களை ஒழிப்பதிலும் சுகாதாரத்துறை காட்டிய அலட்சியமே உயிரிழப்புகளுக்குக் காரணம் என குற்றம்சாட்டியுள்ள அவர்,
நோய்த்தொற்றுகளின் பாதிப்பு அதிகரித்த பிறகு நடவடிக்கை எடுக்கும் அணுகுமுறையைக் கைவிட்டு, பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த கொசு ஒழிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறையையும், தவெக அரசையும் கேட்டுக்கொண்டுள்ள டிடிவி தினகரன், பொதுமக்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் எனவும் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam