Enter your Email Address to subscribe to our newsletters

ஆஸ்திரேலியா, 17 செப்டம்பர் (ஹி.ச.)
தனது முக்கிய குடியேற்றக் கொள்கை உரைக்கு முன்னதாக, வெளிநாட்டு மாணவர்கள் படிக்கும் காலத்தில் தங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளை அழைத்து வர அனுமதிக்கும் வசதியை ஆஸ்திரேலியா நிறுத்தவுள்ளதாகவும், தற்காலிகமாக குடியேறியவர்கள் விசா வகையை மாற்றுவதற்கான விதிகளை கடுமையாக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்துறை அமைச்சர் டோனி பர்க், தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில் உரையாற்றும் போது,
2028-ம் ஆண்டுக்குள் நிகர வெளிநாட்டு குடியேற்ற எண்ணிக்கையை 2,25,000 ஆகக் குறைக்கும் திட்டத்தை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியேற்றவாசிகளால் நாட்டின் வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு அமைப்புகளில் ஏற்படும் நெருக்கடி குறித்து எழுந்த கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து இந்தக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்க வேண்டும் என்றும், நாட்டின் குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் குடியேற்றத் திட்டங்களை ஆண்டுதோறும் மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தும் ஆஸ்திரேலியா முதலில் என்ற கொள்கையை முன்வைக்கும் ஒன் நேஷன் கட்சிக்கு ஆதரவு அதிகரித்து வரும் பின்னணியில் இந்தக் கொள்கை மாற்றம் அமைந்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b