Enter your Email Address to subscribe to our newsletters

ராணிப்பேட்டை, 18 செப்டம்பர் (ஹி.ச.)
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு, வயது 42. இவர் தனது மகள் மதுமிதா, வயது 20 உடன் இருசக்கர வாகனத்தில் சித்தூரில் இருந்து சோளிங்கர் வழியாக திருத்தணி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி பகுதியில் சென்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற பைக் மீது மோதியுள்ளது.
இந்த பயங்கர மோதலில் பைக்கில் சென்ற சுரேஷ்பாபு மற்றும் அவரது மகள் மதுமிதா இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோர சாலை விபத்தில் தந்தை மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b