Enter your Email Address to subscribe to our newsletters

சண்டிகர் , 18 செப்டம்பர் (ஹி.ச.)
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரில் பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்ரித்சர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஹர்ஜித் சிங் (50). இவர் அதிகாலை கேட் ஹகிமா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பைக்கில் துப்பாக்கியுடன் வந்த 2 மர்மநபர்கள், ஹர்ஜித் சிங்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த ஹர்ஜித் சிங்கை போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஹர்ஜித் சிங் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, உயிரிழந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஹர்ஜித் சிங்கின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA