அட்டப்பாடி வனப்பகுதியில் 1,566 கஞ்சா செடிகள் அழிப்பு
திருவனந்தபுரம் , 19 செப்டம்பர் (ஹி.ச.) கேரளா-தமிழ்நாடு எல்லைப் பகுதியான அட்டப்பாடியில், அறுவடைக்கு தயாராக இருந்த 1,566 கஞ்சா செடிகளை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி மலைப்பகுதி வனங்களில் சட்டவி
A


திருவனந்தபுரம் , 19 செப்டம்பர் (ஹி.ச.)

கேரளா-தமிழ்நாடு எல்லைப் பகுதியான அட்டப்பாடியில், அறுவடைக்கு தயாராக இருந்த 1,566 கஞ்சா செடிகளை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி மலைப்பகுதி வனங்களில் சட்டவிரோதமாக கஞ்சா பயிரிடப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து எல்லைப் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் இணைந்து, அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதியில் ரகசியமாக பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு அறுவடைக்கு தயாராக செழித்து வளர்ந்திருந்த 1,566 கஞ்சா செடிகள் இருந்தது தெரியவந்தது.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, சம்பவ இடத்திலேயே தீ வைத்து முழுமையாக அழித்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், வனப்பகுதியில் கஞ்சா பயிரிட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA