ஆசிய விளையாட்டு டி20 அரையிறுதி - இந்தியா 195 ரன்கள் குவிப்பு
டோக்கியோ , 20 செப்டம்பர் (ஹி.ச.) ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் டி20 கிரிக்கெட் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதியில் இந்தியா–வங்காளதேசம் அணிகள் மோதின. நிஷின் நகரி
A


டோக்கியோ , 20 செப்டம்பர் (ஹி.ச.)

ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் டி20 கிரிக்கெட் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதியில் இந்தியா–வங்காளதேசம் அணிகள் மோதின.

நிஷின் நகரில் உள்ள கொரோகி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷிபாலி வர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

சிறப்பாக ஆடிய அவர் 49 பந்துகளில் 100 ரன்கள் விளாசி அசத்தினார்.

அவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியின் ரன் வேகம் அதிகரித்தது.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, வெற்றி பெற 196 ரன்கள் எடுத்தாக வேண்டும் என்ற இலக்குடன் வங்காளதேச அணி களம் இறங்கியது. அரையிறுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA