விசாகப்பட்டினம் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து போராட்டம் - ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர் குடிவாடா அமர்நாத் அறிவிப்பு
விசாகப்பட்டினம், 20 செப்டம்பர் (ஹி.ச) விசாகப்பட்டினத்திற்கு இன்று வருகை தந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ குடிவாடா அமர்நாத் கடுமையாக விமர்சித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர
YSRCP leader Gudivada Amarnath


விசாகப்பட்டினம், 20 செப்டம்பர் (ஹி.ச)

விசாகப்பட்டினத்திற்கு இன்று வருகை தந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ குடிவாடா அமர்நாத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில்,

இன்று விசாகப்பட்டினத்தில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் நிகழ்ச்சி மீண்டும் ஒருமுறை அவரது நிகழ்ச்சி மேலாண்மைத் திறன், விளம்பரத் திறன் மற்றும் சந்தைப்படுத்தும் திறனையே காட்டுகிறது.

அவர் விசாகப்பட்டினத்திற்கு வரும்போது சில பிரச்சினைகள் தீர்க்கப்படும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இன்று விசாகப்பட்டினத்தின் முக்கிய பிரச்சினை குடிநீர் தட்டுப்பாடு. கடந்த 15 நாட்களாக குடியிருப்பு பகுதி மக்களுக்கு தினமும் தண்ணீர் கிடைக்கவில்லை.

இந்த விவகாரத்தில் மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி போராடத்திற்கு, விசாகப்பட்டினம் மக்களுக்கு துணை நிற்பர். அரசிடம் இருந்து தீர்வைப் பெறுவதற்காக போராட்டம் நடத்துவோம், அதற்கான தேதியை விரைவில் அறிவிப்போம்.

இந்த நகரத்தின் தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு காண அரசு முன்வரும் வகையில், இந்தப் போராட்டத்தில் விசாகப்பட்டினம் மக்கள் அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்

என்று அவர் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b