நடிகர் பிளாக் பாண்டி இசையமைத்த ஆல்பம் -தேனிசைத் தென்றல் தேவா வெளியிட்டார்!
சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.) கோவையில் அடுத்த மாதம் ‘பெரிதினும் பெரிது கேள் 2026’ என்ற வணிக மாநாட்டை முன்னிட்டு, நடிகர் ‘பிளாக் பாண்டி’ இசையமைத்துள்ள பிரத்யேக ஆல்பம் பாடல் சென்னையில் தேனிசைத் தென்றல் தேவா வெளியிட்டார். ஆல்பத்தை தேவா வெளியிட்டதற்
க


சென்னை, 24 செப்டம்பர் (ஹி.ச.)

கோவையில் அடுத்த மாதம் ‘பெரிதினும் பெரிது கேள் 2026’ என்ற வணிக மாநாட்டை முன்னிட்டு, நடிகர் ‘பிளாக் பாண்டி’ இசையமைத்துள்ள பிரத்யேக ஆல்பம் பாடல் சென்னையில் தேனிசைத் தென்றல் தேவா வெளியிட்டார்.

ஆல்பத்தை தேவா வெளியிட்டதற்கான காரணத்தை சசி குமார் கூறுகையில்,

தேவாவின் இசையில் நீர் மற்றும் காற்று ஆகிய இயற்கைக் கூறுகளின் தாக்கம் இருப்பதாகவும், மனிதர்களின் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த பஞ்சபூதங்களில் இவ்விரு கூறுகளும் முக்கியமானவை என்பதால், அவரைக் கொண்டு ஆல்பத்தை வெளியிடுவது பொருத்தமானதாக

கருதப்பட்டதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய நடிகர் பிளாக் பாண்டி,

ஞான சஞ்சீவனம் குருகுலத்தின் வழிகாட்டுதலால் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தை குறிப்பிட்டார்.

வரலாற்றில் ஒரு காலத்தை ‘கிறிஸ்துவுக்கு முன்’, ‘கிறிஸ்துவுக்குப் பின்’ எனப் பிரிப்பதைப் போல, தனது வாழ்க்கையையும் ‘குருகுலத்திற்கு முன்’, ‘குருகுலத்திற்குப் பின்’ எனப் பிரித்துப் பார்க்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

இசையமைப்பாளர் தேவா பேசியதாவது,

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் தீவிர பக்தரான தான், ஒருமுறை கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றபோது, அப்பகுதியின் தெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டதாகவும், அதன் பின்னர் அங்கு மழை பெய்ததாகவும் தெரிவித்தார். இருப்பினும், அந்த நிகழ்வை தற்செயலாகவே கருதுவதாகவும், அதற்கான பெருமையை தான் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் தேவா குறிப்பிட்டார்.

மேலும், நமக்கு சாதகமான சூழல் நிலவும் போது எந்த மனநிலையில் இருக்கிறோமோ, அதே மனநிலையை சூழல் மோசமாக இருக்கும்போதும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எல்லா நேரங்களிலும், எல்லாச் சூழல்களிலும் மனதைச் சீராக வைத்துக்கொள்வதே வாழ்க்கையை எதிர்கொள்ளும் முக்கியமான வழி என்றும் தேவா தெரிவித்தார்.

Hindusthan Samachar / Durai.J