மந்தார் மலை சம்பவம் தொடர்பாக பீகார் அரசு மீது தேஜஸ்வி யாதவ் கடுமையான விமர்சனம்
பீகார், 25 செப்டம்பர் (ஹி.ச.) பீகார் மாநிலத்தில் பாங்கா மாவட்டத்தில் உள்ள மந்தார் மலையில் சிறுமி ஒருவர் துன்புறுத்தப்பட்டு தாக்கப்படும் வீடியோ வெளியானதை தொடர்ந்து, பாங்கா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். செப்
மந்தார் மலை சம்பவம் தொடர்பாக பீகார் அரசு மீது தேஜஸ்வி யாதவ் கடுமையான  விமர்சனம்


பீகார், 25 செப்டம்பர் (ஹி.ச.)

பீகார் மாநிலத்தில் பாங்கா மாவட்டத்தில் உள்ள மந்தார் மலையில் சிறுமி ஒருவர் துன்புறுத்தப்பட்டு தாக்கப்படும் வீடியோ வெளியானதை தொடர்ந்து, பாங்கா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

செப்டம்பர் 22 ஆம் தேதி சமூக ஊடகப் பிரிவு மூலம் இந்த வீடியோ தங்கள் கவனத்திற்கு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒரு குழுவினர் மந்தார் மலைக்குச் சென்று, காட்சிகளில் காட்டப்பட்ட இடம் அந்த சுற்றுலாத் தலம்தான் என்பதை உறுதி செய்தனர். அதிகாரிகள் வீடியோவை ஆதாரமாக பதிவு செய்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட நபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், பீகார் அரசை இன்று கடுமையாக விமர்சித்தார்.

இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் இன்று தனது பேஸ்புக் பதிவில் கூறுகையில்,

ஜமுய் மற்றும் சமஸ்திபூர் சம்பவங்களுக்குப் பிறகு, பாங்காவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான மந்தார் மலையில் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, அநாகரிகமாக நடத்தப்பட்டு தாக்கப்படும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது! பீகாரில் சட்டம் ஒழுங்கு என்பது கிட்டத்தட்ட செத்துவிட்டது!.

ஜமுய் சம்பவத்தில் மீதமுள்ள ஐந்து குற்றவாளிகளுக்கு என்ன ஆனது? சமஸ்திபூர் சம்பவத்தில் நான்கு குற்றவாளிகளுக்கு பகுதி தண்டனை கிடைத்ததா, முழு தண்டனை கிடைத்ததா, அல்லது அரசியல் கணக்குகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்களா?

பாங்காவைச் சேர்ந்த இந்த மிருகங்கள் எப்போது பிடிபடுவார்கள்? அவர்களின் சமூக ஊடக ரீல்கள் மற்றும் சாதியைப் பார்த்த பிறகுதான் முதலமைச்சர் இதற்கு எதிர்வினையாற்றுவாரா?

என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b