Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 26 செப்டம்பர் (ஹி.ச.)
பிரபல ஆங்கில ஊடகமான ‘தி பிரிண்ட்’ நிறுவனத்தின் நிறுவனர் சேகர் குப்தா சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவுக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பதில் அளித்துள்ளார்.
சந்திரபாபுவின் ஆட்சி முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ‘தி பிரிண்ட்’ வெளியிட்ட கட்டுரையை சேகர் குப்தா தனது பதிவில் பகிர்ந்திருந்தார்.
அதில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்த ‘பிக்சல்கள்’ காலத்தில் இருந்து, தற்போது விவசாயம் மற்றும் பாசனத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் ‘பைப் லைன்கள்’ நோக்கி சந்திரபாபுவின் ஆட்சி பயணித்து வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு சந்திரபாபு நாயுடு தனது அறிக்கையில் அதாவது கூறுவது
தனது பொது வாழ்க்கை முழுவதும் வளர்ச்சியின் பலன்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்பதே தனது நம்பிக்கையாக இருந்து வருவதாக தெரிவித்தார்.
1990-களில் மாறிவந்த பொருளாதார சூழலுக்கு ஏற்ப தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்குவதும், புதிய வாய்ப்புகளை ஏற்படுத்துவதும் தனது முக்கிய பணியாக இருந்ததாக அவர் கூறினார்.
ஆனால் தற்போது தனது கவனம் விவசாயிகளின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் இருப்பதாக சந்திரபாபு தெரிவித்தார். குறிப்பாக, பல ஆண்டுகளாக பாசன நீருக்காக காத்திருக்கும் கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்வதே தனது முக்கிய இலக்கு என்று அவர் கூறினார்.
“பிக்சல்கள் ஆனாலும், பைப் லைன்கள் ஆனாலும் நோக்கம் ஒன்றுதான். மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது, அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவது, ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதுதான் எனது நோக்கம்” என்று சந்திரபாபு குறிப்பிட்டார்.
மேலும், தனது ஆட்சி பயணத்தை சிறப்பாக எடுத்துக்காட்டியதற்காக சேகர் குப்தாவுக்கும், ‘தி பிரிண்ட்’ ஊடகத்துக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
காலத்துக்கு ஏற்ப தனது ஆட்சி முன்னுரிமைகள் மாறினாலும், மக்களுக்கு சேவை செய்வதே தனது அடிப்படை நோக்கம் என்று சந்திரபாபு தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA