Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 26 செப்டம்பர் (ஹி.ச.)
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ள ஸ்குவாஷ் வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பதக்கம் வென்ற இருவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
மேலும், வீரர்களின் சாதனையைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் இருவருக்கும் தலா ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமாரின் வெற்றி, தமிழ்நாட்டின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு புதிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இவர்களைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இருவரும் எதிர்காலத்தில் பல்வேறு சாதனைகளைப் படைக்க வாழ்த்துவதாகவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P