மதுரை வரும் முதல்வர் விஜய் - மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம்
மதுரை, 26 செப்டம்பர் (ஹி.ச.) உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பின்பு கடந்த 17-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து செப்.18 முதல்
மதுரை வரும் முதல்வர் விஜய் - மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம்


மதுரை, 26 செப்டம்பர் (ஹி.ச.)

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பின்பு கடந்த 17-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து செப்.18 முதல் அக்.2-ம் தேதி வரை மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மதுரைக்கு நாளை மறுநாள் செப்டம்பர் 28-ஆம் தேதி வருகை தர உள்ள தமிழக முதலமைச்சர் விஜய், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.

அவரது மதுரை பயணத்திட்டத்தின்படி, செப்டம்பர் 28-ஆம் தேதி பகல் 12.30 மணிக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடைபெறும் விழாவில், தமிழக அரசின் புதிய திட்டமான 'தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை' முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து பகல் 1 மணியளவில், புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

அரசு நிகழ்ச்சிகளை முடித்த பிறகு, மாலை 4.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு செல்லும் முதல்வர் விஜய், அங்கு அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்கிறார்.

முதல்வரின் வருகையை முன்னிட்டு கோயில் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Hindusthan Samachar / vidya.b