Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழக அரசின் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ஆயிரக்கணக்கான பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த உதவித்தொகைகள் அனைத்தும் தற்போது நேரடி பணப்பரிமாற்ற முறையில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில் ஒரு சில பயனாளிகளின் வங்கிக் கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆதார் இணைப்பு இல்லாத காரணத்தால் உதவித்தொகை வங்கிக் கணக்கில் செலுத்துவதில் தாமதம் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே பயனாளிகள் தங்களது உதவித்தொகை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்துடன் உடனடியாக வங்கிக்குச் சென்று ஆதார் இணைப்பு பணியை முடிக்க வேண்டும் என்று சென்னை ஆட்சியர் மாலதி ஹெலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b