Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 26 செப்டம்பர் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகரான தேவமூர்த்தி என்பவர் இருந்துள்ளார்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், அதிமுக வேட்பாளர் கணிதாசம்பத்தின் தீவிர ஆதரவாளருமான சரவணன் என்பவர், தேவமூர்த்தியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை அரிவாளால் தலையில் பலமாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் தேவமூர்த்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலுக்கான காரணம் மற்றும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் நடைபெற்ற இந்த அரிவாள் வெட்டு சம்பவம் கருங்குழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P