Enter your Email Address to subscribe to our newsletters

மதுராந்தகம், 26 செப்டம்பர் (ஹி.ச.)
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் அந்த தொகுதியில் வேட்பாளராக ஜானகிராமன் களமிறக்கப்பட்டுள்ளார்.
அவரை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொகுதி முழுவதும் சூறாவளிப் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்றும் நாளையும் அவரது பரப்புரை திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி இன்று புழுதிவாக்கம், எல்.எண்டத்தூர் மற்றும் மதுராந்தகம் தேரடி தெரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சீமான் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து நாளை படாளம், மேலவளம்பேட்டை கூட்டுச்சாலை மற்றும் அச்சிறுப்பாக்கம் சந்தை பகுதி ஆகிய இடங்களில் அவரது பரப்புரை நடைபெற உள்ளது.
இந்த இரண்டு நாள் பரப்புரையின் போது சீமானுடன் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் வேட்பாளர் ஜானகிராமன் ஆகியோர் உடனிருக்க உள்ளனர்.
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவான மரகதம் குமரவேல் தவெகவின் 'விசில்' சின்னத்தில் மீண்டும் இங்கு போட்டியிடுகிறார்.
தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இவரை ஆதரித்து தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
திமுகவின் சட்டப் பிரிவுத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான இ. பரந்தாமன் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார்.
இவரை ஆதரித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.
அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கனிதா சம்பத் இங்கு அதிமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
இவரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b