விழுப்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் ஆம்னி பேருந்து மோதி விபத்து - மகள் கண்முன்னே தந்தை பலியான சோகம்
சென்னை, 26 செப்டம்பர் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம் வாழப்பட்டு பகுதியைச் சேர்ந்த நடராஜன் கல்லூரி மாணவியான தனது மகள் சங்கீதாவுடன் விழுப்புரம் நோக்கிச் சென்றுள்ளார். டி.முத்தையால்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற இருசக்கர வா
விழுப்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் ஆம்னி பேருந்து மோதி விபத்து - மகள் கண்முன்னே தந்தை பலியான சோகம்


சென்னை, 26 செப்டம்பர் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம் வாழப்பட்டு பகுதியைச் சேர்ந்த நடராஜன் கல்லூரி மாணவியான தனது மகள் சங்கீதாவுடன் விழுப்புரம் நோக்கிச் சென்றுள்ளார். டி.முத்தையால்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற இருசக்கர வாகனம் திடீரென நிற்கவே அந்த இருசக்கர வாகனத்தில் மோதி நிலை தடுமாறியுள்ளார்.

அப்போது எதிரே வந்த ஆம்னி பேருந்து எதிர்பாராதவிதமாக நடராஜனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்டது.

இதில் தந்தை சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தனது கண் முன்னே தந்தை உயிரிழந்ததை கண்ட மகள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்கச் செய்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், ஆம்னி பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிவேகம் மற்றும் கவனக்குறைவே விபத்துக்கு காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Hindusthan Samachar / vidya.b