பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு – தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு
சென்னை, 26 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதற்கு எதிராக, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் விஜய் ஆனந்த் சார்பில் த
High court


சென்னை, 26 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதற்கு எதிராக, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் விஜய் ஆனந்த் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் கீழ் உரிய மதிப்பீடுகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் மேற்கொள்ளாமல் தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அறிவிப்புகளுக்கு எதிரானது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ